குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐக்கிய தேசியக் கட்சிக்கே அனைத்து மக்களினதும் ஆதரவு காணப்படுகின்றது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார். சிறுபான்மை சமூகத்தினர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரதும் ஆதரவு காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
இனம் மற்றும் மத ரீதியாக செயற்பட்டு வரும் அனைத்து அரசியல் கட்சிகளையும் மக்கள் நிராகரித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியினால் மட்டுமே நாட்டுக்கு சரியான தலைமைத்துவத்தை வழங்க முடியும் என அவர் என குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சிக்கு சிங்கள பௌத்தர்கள் மட்டுமன்றி தமிழர்களும் முஸ்லிம்களும் ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.