தெற்கு ஐரோப்பிய நாடான மால்டாவில் அரசு ஊழலில் ஈடுபட்டுவருவதாக விமர்சித்து வந்த பிரபல பதிவரான டாஃப்னே கருவானா கலிஜியா என்பவர் கார் குண்டு வெடிப்பில் சிக்கி உயிரிழந்துள்ளார். 53 வயதான இவர் தமது வீட்டில் இருந்து கிளம்பிய சிறிது நேரத்தில் அவர் செலுத்திச் சென்ற கார் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஏற்கனவே அவர் காவல்துறையில் முறைப்பாடு செய்திருந்ததுடன் மேலும் தனக்கு வந்த மிரட்டல் கடிதத்தையும் ஒப்படைத்திருந்தார். மால்டா நாட்டின் பிரதமர் ஜோசஃப் மஸ்கட்டுக்கும், அவரது மனைவி மிச்செலுக்கும் பனாமா ஊழலில் தொடர்பு இருப்பதாக் டாஃப்னே தொடந்து எழுதி வந்தார்.
இதனை மறுத்துவந்த ஜோசஃப் மஸ்கட், இந்தக் குற்றச்சாட்டு காரணமாக முன்கூட்டியே தேர்தல் நடத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் இந்தக் கொலையை கண்டித்துள்ள ஜாசஃப் மஸ்கட் இவ்விதமான தாக்குதலை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது என தெரிவித்துள்ளார்.