173
டெல்லியில் உள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தில் இன்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. எனினும் இதனால் எவருக்கும் பாதிப்புக்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகத்தின் தென் பகுதியிலுல்ள 242 அறையிலேயே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு 20 நிமிடங்களில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது அறையில் இருந்த சில பொருட்களுக்கு மாத்திரம் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Spread the love