குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் பிரித்தானியாவிடமிருந்து மேலும் சலுகைகளை எதிர்பார்ப்பதாக ஐரோப்பிய ஓன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் வேளை பிரித்தானியா எவ்வளவு தொகையை செலுத்தும் என பிரித்தானிய பிரதமர் தெளிவாக தெரிவிக்கவேண்டும் என நெதர்லாந்து அமைச்சர் ஓருவர் தெரிவித்துள்ளார்.
முக்கியமான மூன்று விடயங்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம் எனவும் நெதர்லாந்து அமைச்சர் தெரிவித்துள்ளார். டிசம்பரில் இடம்பெறவுள்ள அடுத்த சுற்றுப்பேச்சுவார்த்தைகளிற்கு முன்னர் பிரித்தானியா இந்த யதார்த்தத்தை உணர்ந்துகொள்ளும் என எதிர்பார்க்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.