குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பால்நிலை மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண் ஒருவருக்கு விளையாட்டுப் போட்டியில் பங்கேற்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆணாக இருந்து பின்னர் பால்நிலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியுள்ளார்.
ஹன்னா மவுன்ஸி ( Hannah Mouncey ) ) என்ற பெண்ணுக்கே இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலிய விதிகள் கால்பந்து தொழில்முறை பெண்கள் லீக் ( Australian rules football professional women’s league ) போட்டித் தொடரில் ஹன்னா பங்கேற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
27 வயதான ஹன்னா, அவுஸ்திரேலிய தேசிய கைப்பந்து அணியின் சார்பில் போட்டிகளில் பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது பால்நிலை மாற்று அறுவை சிகிச்சை மூலம் பெண்ணாக மாறியுள்ள ஹன்னா, மகளிர் போட்டிகளில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹன்னாவின் பலம், உடல்வாகு உள்ளிட்ட ஆண்களுக்கு உரிய பல்வேறு விடயங்களினால் போட்டியில் பங்கேற்பதனால் ஏனைய வீராங்கனைகளுக்கு பாதக நிலைமை ஏற்படும் எனக் கூறி இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனினும், இந்த தடை பெரும் ஏமாற்றத்தை அளிப்பதாக ஹன்னா தெரிவித்துள்ளார்.