குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேவை ஏற்பட்டால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, மத்திய வங்கி பிணை முறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆஐணக்குழுவின் முன்னிலையில் அழைக்க நேரிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் தலைவர் உச்ச நீதிமன்ற நீதியரசர் கே.ரீ.சித்ரசிறி இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவினர், பிரதமரிடம் விளக்கம் கோரும் வகையிலான வினாக்கொத்து ஒன்றை தயாரித்து அதனை அனுப்பி வைத்துள்ளதாகவும் சத்தியக்கடதாசி ஒன்றின் மூலம் அதற்கான பதில் கோரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதற்கான பதில் கிடைத்ததன் பின்னர் தேவை ஏற்பட்டால் ஆணைக்குழுவின் எதிரில் முன்னிலையாகுமாறு பிரதமருக்கு அறிவித்தல் விடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பிலான வாய்மொழிமூல விசாரணைகள் நேற்றைய தினம் பூர்த்தியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.