குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மீளவும் போட்டியிட்டால் அவரை தோற்கடிப்போம் என ஜே.வி.பி கட்சி தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வதாகத் தெரிவித்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆட்சி பீடம் ஏறியதாக தெரிவித்த அவர் எனவே உடனடியாக இந்த வாக்குறுதியை ஜனாதிபதி நிறைவேற்ற வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.
பொது வேட்பாளராக போட்டியிட்ட போது வாக்குறுதிகளுக்காகவே மக்கள் வாக்களித்தனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும், மீளவும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டால் அவரை தோற்கடிக்க மக்களை அணி திரட்டுவோம் என அவர் தெரிவித்துள்ளார்.