Home இலங்கைஜனாதிபதி அடுத்த வாரம் கட்டாருக்கு பயணம் செய்ய உள்ளார்

ஜனாதிபதி அடுத்த வாரம் கட்டாருக்கு பயணம் செய்ய உள்ளார்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த வாரம் கட்டாருக்கு பயணம் செய்ய உள்ளார். மூன்று நாள் பயணமொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி கட்டாருக்கு செல்ல உள்ள நிலையில் இலங்கைக்கும் கட்டாருக்கும் இடையில் சில ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட உள்ளன.

குறிப்பாக சக்தி வளம், ராஜதந்திர பயிற்சி, ஆய்வு மற்றும் நீர்வழங்கல், கழிவு நீர் முகாமைத்துவம் போன்றன தொடர்பில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது. ஜனாதிபதியின் கட்டாருக்கான  பயணம் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள வழியமைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் 24ம், 25ம் மற்றும் 26ம் திகதிகளில் ஜனாதிபதி இந்த பயணத்தை மேற்கொள்ள உள்ளார். இந்த பயணத்தில்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன், சில அமைச்சர்களும்  இணைந்து கொள்ள உள்ளனர்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More