169
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கலிர்போர்னியாவில் ஈரல் அழற்சி நோயினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக உயர்வடைந்துள்ளது. ஒரு வார காலத்தில் இவ்வாறு 19 பேர் வரையில் இந்த நோயினால் உயிரிழந்துள்ளனர். கலிபோர்னியாவில் சுமார் 500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் தாக்கத்தினால்; பாதிக்கப்பட்டுள்ளனர்.
வீடற்றவர்களே அதிகளவில் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த இருபது ஆண்டுகளில் ஈரல் அழற்சி நோய் அதிகளவில் ஏற்பட்ட இரண்டாவது சந்தர்ப்பம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
Spread the love