குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பிரித்தானியா விலகியபின்னரும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் பிரித்தானியா வில்; தங்கியிருப்பதை இலகுவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அறிவிக்கவுள்ளார்.
பிரதமர் இந்த அறிவிப்பை இன்று வியாழக்கிழமை வெளியி;டவுள்ளார். ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவதற்காக பிரித்தானியா வழங்க முன்வந்துள்ள தொகையை விட அதிகமாக ஐரோப்பிய ஓன்றிய தலைவர்கள் கோரி வருகின்ற நிலையில் பிரதமர் மே ஐரோப்பிய பிரஜைகளிற்கு . சலுகைகளை வழங்கவுள்ளார்.
பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முட்டுகட்டை நிலைக்கு முடிவை காணும் ஓரு முயற்சியாகவும் அவர் இந்த அறிவிப்பை வெளியிடவுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளிற்கு மே நேரடி அறிவிப்பைபொன்றை மேற்கொள்ளவுள்ளார். ஐக்கியஇராச்சியத்தில் வாழும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகள் எங்கள தேசத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கியுள்ளனர்.நாங்கள் அவர்கள் தொடர்ந்தும் எங்கள் நாட்டில் வாழவேண்டும் என விரும்புகின்றோம் எனஅவர் குறிப்பிடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கியஇராச்சியத்தில் சட்டபூர்வமான விதத்தில் வாழும் ஐரோப்பிய பிரஜைகள் தொடர்ந்தும் அங்கு வாழ முடியும் என அவர் தெரிவிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.