குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கட்டலோனியாவில் தேர்தல் நடாத்த ஸ்பெய்ன் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கட்டலோனியாவின் பாராளுமன்றை கலைப்பதற்கு எதிர்க்கட்சியின் ஆதரவினை ஸ்பெய்ன் திரட்டியுள்ள நிலையில் தேர்தல் நடாத்த தீர்மானித்துள்ளது. பிராந்திய அரசாங்கம் சுதந்திரப் பிரகடனம் செய்ததனைத் தொடர்ந்து, ஸ்பெய்ன் அரசாங்கம் கடுமையான சில நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் ஜனவரி மாதம் தேர்தலை நடாத்த ஸ்பெய்ன் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. மத்திய அரசாங்கத்தின் கீழ் கட்டலோனியாவின் ஆட்சி கொண்டு வரப்படுவதனை விரும்புவதாக கட்டலோனியாவின் பிரதான எதிர்க்கட்சியான சோசலிச கட்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.