குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த மாநாயக்க தேரர்களின் அறிவுரைகளை அரசாங்கம் கேட்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். மாநாயக்க தேரர்கள் சொல்வதனை கேட்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கட்சிகளின் நிலைப்பாடு தொடர்பில் செய்தி வெளியிடும் போது ஊடகங்களில் அந்த கட்சியின் தலைவர்களது புகைப்படங்களை பிரசூரிப்பது வழமையானதாகும். அதேபோன்று, மாநாயக்க தேரர்கள் தொடர்பிலான செய்தியொன்றில் மல்வத்து பீடாதிபதியின் புகைப்படம் பிரசூரிக்கப்பட்டதில் எவ்வித தவறும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் தாம் இவ்வாறு எவரையும் விமர்சனம் செய்திருந்தால் தம்மை சர்வாதிகாரி என கூறியிருப்பார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கைச் செலவு பற்றி யாரும் பேசுவதில்லை எனவும், பெண்கள் அரசாங்கம் மீது கடும் கோபத்தில் இருக்கின்றார்கள் எனவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.