குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அணுவாயுதங்களை வைத்திருப்பது வடகொரியாவை பொறுத்தவரை வாழ்வா சாவா என்ற விடயம் என அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சின் வடஅமெரிக்க விவகாரங்களிற்கு பொறுப்பான அதிகாரி சூ-சொன்-ஹியு தெரிவித்துள்ளார். வடகொரியா தனது அணுவாயுத திட்டம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைகள் எதனையும் தற்போதைக்கு மேற்கொள்ளப்போவதில்லை என அந்த நாட்டின் சிரேஸ்ட இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது தங்களை பொறுத்தவரை வாழ்வா சாவா என்ற விடயம் எனவும் தற்போதைய சூழல் தாக்குதல் ஒன்றை எதிர்கொள்வதற்கு அணுவாயுதங்களை வைத்திருப்பது எவ்வளவு அவசியமான விடயம் என்பதை உணர்த்தியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நெருப்பை நெருப்பால் எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள அவர் ஐக்கியநாடுகள் மூலம் தடைகளை விதிக்கும் எந்த முயற்சியையும் வடகொரியா யுத்தபிரகடனமாகவே கருதும் என குறிப்பிட்டுள்ளார்.