தலாய்லாமாவை சந்திப்பது மிகப்பெரிய குற்றம் என சீனா உலக நாட்டுத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. திபெத் புத்த மத தலைவரான 82 வயதுடைய தலாய்லாமாவை சீனா ஓரு பிரிவினைவாதியாக கருதுவதுடன் அவர் சீனாவிடம் இருந்து திபெத்தை பிரித்துக்கொண்டு செல்வதற்கு முயற்சிக்கிறார் எனவும் குற்றம் சுமத்தி வருகின்றுது எனினுத் தலாய்லாமாவை ஆன்மிகவாதியாக கருதும் உலகத் தலைவர்கள் பலரும் அவரை சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சிரேஸ்ட தலைவர்களில் ஒருவரும், துணை அமைச்சருமான சாங் யூஜியோங் எந்தவொரு நாடோ அல்லது எந்தவொரு நபரின் அமைப்போ தலாய்லாமாவை சந்திக்க ஒப்புக்கொண்டால், அது சீன மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் மாபெரும் குற்றம் ஆகும் எனத் தெரிவித்துள்ளார்.
அவர் சொந்த நாட்டுக்கு துரோகம் செய்து விட்டு வேறு நாட்டுக்கு சென்று விட்டார் எனவும் அவர் நாடு கடந்த அரசாங்கம் ஒன்றை உருவாக்கியுள்ளார் எனவும் இதன் நோக்கம் சீனாவில் இருந்து திபெத்தை தனியாக பிரித்தெடுப்பது மட்டும்தான் எனவும் தெரிவித்துள்ளார். தலாய்லாமா, திபெத்தில் சீன ஆட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, அந்த முயற்சி வெற்றி அடையாத நிலையில், 1959-ம் ஆண்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார் என்புத குறிப்பிடத்தக்கது