குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
குற்றவாளிகளைப் பரிமாறிக் கொள்வது தொடர்பில் ஈரானுக்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஈரானிய தலைநகர் தெஹ்ரானில் நேற்றைய தினம் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது.
தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை இரு நாடுகளுக்கு இடையில் பரிமாறிக் கொள்வது குறித்து இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஈரானுக்கான இலங்கைத் தூதுவர் அனிஸ் சய்யாடி மற்றும் ஈரானிய நீதி அமைச்சர் அலிரீசா அவாவி ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளனர். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை சகல வழிகளிலும் விஸ்தரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அந்நாட்டு நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விரைவில் ஈரானுக்கு பயணம்; செய்வார் என அனிஸ் சய்யாடி தெரிவித்துள்ளார்.