Home இலங்கைவி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணம் திருநெல்வேலி ரி.சி.சி வசம்:-

வி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்த கிண்ணம் திருநெல்வேலி ரி.சி.சி வசம்:-

by editortamil

வி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்தமாக யாழ். மாவட்ட துடுப்பாட்டச் சங்கம் நடத்தி வந்த இருபது-20 கிரிக்கெட் தொடரின் வெற்றிக்கிண்ணத்தை திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி பெற்றுக்கொண்டது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற இறுதியாட்டத்தில், யாழ். பல்கலைக் கழக அணியை எதிர்த்து திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி விளையாடியது.

அதில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற , திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணித்தலைவர் முதலில் துடுபெடுத்தாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 129 ஓட்டங்களை திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழகம் பெற்றது.

பதிலுக்கு 130 ஓட்டங்கள் பெற்றால் வெற்றி என களமிறங்கிய பல்கலைக் கழக அணி, 19 ஓவர்களில் 105 ஓட்டங்களை மாத்திரம் பெற்று, சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

இதனால், திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி, 24 ஓட்டங்களால் வெற்றியைத் தனதாக்கிக் கொண்டு சம்பியனாகியது. இதன்மூலம் வி.ரி.மகாலிங்கம் ஞாபகார்த்த 20 க்கு இருபது முதலாவது கிண்ணத்தை தனமாக்கிய பெருமையை திருநெல்வேலி ரி.சி.சி விளையாட்டுக் கழக அணி பெற்றுக்கொண்டது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More