குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
இலங்கை மருத்துவர் ஒருவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் சார்பில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஐ.எஸ் தீவிரவாதிகளினால் வெளியிட்டுள்ள காணொளியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மருத்துவர் ஒருவரும் தீவிரவாதிகளின் சார்பில் கடமையாற்றி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த இந்திய மருத்துவர் ஐ.எஸ் தீவிரவாதிகளின் மருத்துவ வசதிகள் குறித்து காணொளியில் விபரித்துள்ளார்.
அவுஸ்திரேலியா, ரஸ்யா, இலங்கை போன்ற நாடுகளின் மருத்துவர்களும் இவ்வாறு சேவையாற்றி வருவதாக குறித்த இந்திய மருத்துவர் காணொளியில் தெரிவித்துள்ளார். ஐ.எஸ் தீவிரவாதிகளின் மருத்துவ சேவையில் இணைந்து கொள்ளுமாறு உலகம் முழுவதிலும் உள்ள மக்களிடம் இந்த இந்திய மருத்துவர் கோரியுள்ளார்.