183
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்பெய்ன் அரசாங்கத்தின் உத்தரவுகள் பின்பற்றடாது என கட்டலோனிய அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. கட்டலோனிய அரசாங்கத்தின் வெளிவிவகார பேச்சாளர் ராவுல் ரொமேவா இதனைத் தெரிவித்துள்ளார். கட்டலோனிய அரசாங்கத்தை கலைக்க ஸ்பெய்ன் பிரதமர் மரினோ ராஜோய் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் பதிலளிப்பதற்காக கட்டலோனிய பாராளுமன்றம் எதிர்வரும் வியாழக்கிழமை கூட உள்ளது. சில வேளைகளில் பாராளுமன்றில் கட்டலோனியா சுதந்திரப் பிரகடனம் செய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Spread the love