191
மட்டக்களப்பு, கல்குடா தொகுதியிலுள்ள உள் ளூராட்சி மன்ற எல்லை நிர்ணயத்தில் தமிழ் மக்களின் பூர்விக நிலங்கள் பிரிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்து, வாழைச்சேனையில் பாரிய ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது
வாழைச்சேனை பொது அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
வாழைச்சேனை, கைலாயப் பிள்ளையார் ஆலய முன்றலில் ஆரம்பமான குறித்த ஆர்ப்பாட்டப் பேரணி பிரதேச செயலகத்தில் நிறைவடைந்த நிலையில் அங்கு கோரிக்கைகள் அடங்கிய மனு உதவித் திட்டமிடல் பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டது.
Spread the love