ரோஹிங்கியா முஸ்லிம்களை மியான்மர் அரசு கையாண்ட விதத்தை கருத்தில் கொண்டு அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடை விதிக்க அமெரிக்கா யோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில், மியான்மரில் ராக்கைன் மாவட்டத்தில் ரோஹிங்கியா முஸ்லிம் சமூகத்தின் மீது நடத்தப்பட்ட வன்முறைகள் குறித்து அமெரிக்கா தனது நிலைப்பாட்டை தெரிவித்திருந்தது.
இதன் அடுத்த கட்டமாக சிறுபான்மையினராக உள்ள ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மர் அரசு மேற்கொண்ட வன்முறைகள் காரணமாக அமெரிக்கா அந்நாட்டின் மீது நடவடிக்கை எடுக்க ஆலோசனை மேற்கொண்டு வருகிறது எனவும் இதில் பொருளாதாரத் தடைகளும் இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.