17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடரின் அரையிறுதிப் போட்டியில் பிரேசில் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அணி முதன்முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக்கோப்பை கால்பந்து தொடர் இந்தியாவின் கொல்கத்தா, டெல்லி, கொச்சி, கோவா உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் கொல்கத்தாவில் நடைபெற்ற தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் பிரேசில் மற்றும் இங்கிலாந்து அணிகள் போட்டியிட்டன.
ஆட்டநேர முடிவில் 3-1 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் றைன் ப்ரீவெஸ்டர் ( Rhian Brewster) ஹாட்ரிக் கோல்களை அடித்து அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு சென்றுள்ளார். யு-17 உலகக்கோப்பை வரலாற்றில் முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு இங்கிலாந்து அணி நுழைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.