குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியுள்ளது. புனேவில் நேற்றைய தினம் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
இதன்படி களமிறங்கிய நியூசிலாலந்து அணி நிர்ணயி;க்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கட்டுகளை இழந்து 230 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டது. இதில் எம்.நிகலோஸ் 42 ஓட்டங்களை,யும் கிரான்ட்ஹோம் 41 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார் மூன்று விக்கட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 46 ஓவர்களில் நான்கு விக்கட்டுகளை இழந்து 232 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இதில் சிக்கர் தவான் 68 ஓட்டங்களையும், தினேஸ் கர்த்திக் 64 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.