207
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பேருந்துகளில் இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் நிலையை உருவாக்குங்கள் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்துள்ளார்.
வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.மேலும் தெரிவிக்கையில் ,
வடமாகணத்தில் சேவையில் ஈடுபடும் பெரும்பாலான பேருந்துக்களில் இருக்கைகளுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி செல்கின்றார்கள். அதனால் பயணிகள் பேருந்தில் மிதிபலகைகளில் பயணம் செய்கின்றார்கள். இருக்கைகளுக்கு ஏற்றவாறு பயணிகளை ஏற்றும் வகையில் பேருந்து சேவைகள் இடம்பெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
அதன் போது கருத்து தெரிவித்த மற்றுமொரு ஆளும் கட்சி உறுப்பினரான த. குருகுலராஜா , யாழ்.- கொழும்பு பேருந்து சேவைகள் உரிய முறையில் நடைபெறுகின்றது. அதேபோல ஏனைய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்து சேவைக்கும் நடைபெற வேண்டும். என தெரிவித்தார்.
அதேவேளை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா கருத்து தெரிவிக்கும் போது , கடந்த நான்கு வருடங்களாக போக்குவரத்து அமைச்சை ஆளும் கட்சி வைத்திருந்தும் நடவடிக்கை இல்லை என தெரிவித்தார்.
Spread the love