259
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடல் வளங்களை பாதுகாக்கமால் விட்டால் ,மீன் வளங்கள் அழிவடைந்து விடும் பின்னர் அமைச்சர் கடலினுள் மீன் குஞ்சு விடவேண்டிய நிலை ஏற்படும் என வடமாகாண ஆளும் கட்சி உறுப்பினர் து. ரவிகரன் தெரிவித்துள்ளார். வடமாகாண சபையின் 108ஆவது அமர்வு இன்றைய தினம் கைதடியில் உள்ள பேரவைக்கட்டடத்தில் நடைபெற்றது. அதன் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில் ,
கடல்வளங்களை பாதுகாக்க வேண்டும். முல்லைத்தீவு கடலில் சட்டவிரோத மீன்பிடி முறைகளை பயன்படுத்தி தொழில் செய்கின்றார்கள். இதனால் கடல் வளங்கள் பாதிக்கப்படுகின்றது. தற்போது கரைவலை பாடுகளில் தொழில் செய்வோர். கரைவலை இழுக்க உழவு இயந்திரங்களை பயன்படுத்து கின்றார்கள். இதனால் கடல் வளங்கள் பாதிக்க படுவது மாத்திரமின்றி சுற்று சூழலும் பாதிக்கபப்டுகின்றன.
கடற்கரைகளில் உழவு இயந்திரங்கள் பாவிப்பதனால் கரைகளில் உள்ள இராவணன் மீசை போன்ற கடலரிப்பை தடுக்கும் தாவரங்கள் அழிக்கப்படுகின்றன. அதனால் மண்ணரிப்பு கடலரிப்பு ஏற்படும். இதனால் கரையோர பிரதேசங்கள் பாதிக்கப்படும்.
இவ்வாறான சட்டவிரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்த தவறின் எதிர்காலத்தில் கடலில் மீன் வளங்கள் இல்லாமால் போய்விடும். அதன் பின்னர் கடலில் மீன் குஞ்சு விடும் திட்டத்தை உருவாக்கி அமைச்சர் கடலினுள் மீன் குஞ்சு விட வேண்டிய நிலை ஏற்படும் என தெரிவித்தார்.
Spread the love