199
இந்தோனீசியாவில் உள்ள பட்டாசுத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் குறைந்தது 46 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைநகர் ஜகார்த்தாவுக்கு மேற்குப் பகுதியில் உள்ள இந்த தொழிற்சாலை வளாகத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் பாதிக்கப்பட்டோரை வெளியேற்றிக் கொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த தொழிற்சாலையில் மொத்தம் 103 தொழிலாளர்கள் வேலை செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love