குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
தேர்தல்களை எதிர்நோக்க முடியாத நிலைமை அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் வாழ்க்கைச் செலவு வெகுவாக உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
வாழ்க்கைச் செலவு உயர்வு தொடர்பில் இரண்டாவது தடவையாக அமைச்சரவையில் கடுமையான வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன. வாழ்க்கைச் செலவு உயர்வினை கட்டுப்படுத்துவதற்கு கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிசாட் பதியூதீன் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் அரசாங்கத்தினால் தேர்தல்களை எதிர்நோக்க முடியாது என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.