குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாராளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென ஜே.என்.பி கட்சி மீளவும் வலியுறுத்தியுள்ளது. நாட்டை பிளவடையச் செய்யும் வகையில் அரசியல் சாசனம் அமைக்கப்பட்டு அது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் நிறைவேற்றப்பட்டால் பாராளுமன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்பட வேண்டுமென ஜே.என்.பி.யின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.
மாகாணசபைகளுக்கு அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்டால் பாராளுமன்றின் அவசியம் இருக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைகளுக்கு காணி மற்றும் நிதி அதிகாரங்களை வழங்கும் வகையில் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டு வருவதாகவும் நாட்டை பிளவடையச் செய்வதனை ஜே.என்.பி எதிர்ப்பதாகவும் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.