Home இந்தியா சசிகலா குடும்பத்தின் பெயரிலுள்ள போலி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு உத்தரவு

சசிகலா குடும்பத்தின் பெயரிலுள்ள போலி நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு உத்தரவு

by admin


சசிகலா குடும்பத்துக்கு தொடர்புடைய போலி நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்யுமாறு இந்திய  மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கறுப்பு பணத்தினை ஒழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மத்திய அரசு பண மதிப்பு நீக்க நடவடிக்கை எடுத்ததன் அடுத்த கட்டமாக போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

3 லட்சம் போலி கணக்குகளில் நீண்ட காலமாக செயல்பாட்டில் இல்லாமல் இருந்த 2.2 லட்சம் நிறுவனங்களின் பதிவுகளை மத்திய அரசு சமீபத்தில் ரத்து செய்துள்ளதுடன்  இந்த போலி நிறுவனங்களில் இயக்குனர்களாக இருந்த 1.06 லட்சம் பேரை நிதி பரிவர்த்தனை முறைகேடு செய்ததாக  தெரிவித்து அவர்களையுமட் பதவிநீக்கம் செய்தது.

அந்தவகையில்  அவ்வாறு முடக்கப்பட்ட போலி நிறுவனங்கள் மற்றும் தகுதி நீக்கம் செய்யப்பட்ட இயக்குனர்களின் பெயர்களை மத்திய தொழில் துறை அமைச்சகம் வெளியிட்டது.  இந்தநிலையில்  போலி நிறுவனங்கள் பட்டியல் சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, கேரள முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதாலா உள்பட பல பிரபலங்கள் தொடர்புடைய நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன.

போலி நிறுவன பட்டியலில் சசிகலா குடும்பத்துக்கு தொடர்புடைய   சில நிறுவனங்களும் பட்டியலில் இடம் பெற்றுள்ளன. குறித்த நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிந்து அவற்றை பறிக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விரைவில் இதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாக உள்ளதாகவும்  போலி நிறுவனங்களின் சொத்துக்களை அடையாளம் காணும் பணியை மாநில அரசு உடனடியாக மேற்கொண்டு முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

மேலும் போலி நிறுவனங்களின் சொத்துக்களை வேறு பெயரில் மாற்றுவதற்கான முயற்சியில் ஈடுபடுவதை தடுக்கவும், இதற்கு உதவி செய்யும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மத்திய-மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More