147
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஹெரோயின் போதைப் பொருளுடன் பாகிஸ்தானிய பிரஜை ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். வெள்ளவத்தையில் வைத்து இன்றைய தினம் குறித்த பாகிஸ்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த பாகிஸ்தான் பிரஜையுடன் மற்றுமொரு இலங்கையரும் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர்களிடமிருந்து 1.6 கிலோ கிராம் எடையுடைய போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. 15 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது.
Spread the love