வவுனியா, கல்நட்டன்குளம் பிரதேசத்தில் உள்ள சுற்றுலாப் பகுதி ஒன்றில் இருந்து விடுதலைப் புலிகளால் மறைத்து வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒரு தொகை வெடி பொருட்கள் இன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பகுதியில் புனரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்களால் காவல்துறையினருக்கு வழங்கப்பட்ட தகவல்களுக்கயை குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
எம்.பி.எம்.ஜீ வகையை சேர்ந்த சுமார் 500 தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் இவை விடுதலைப்புலிகளினால் யுத்தகாலத்தில் மறைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வெடிபொருட்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு பின்னர் செயலிழக்கச் செய்யப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.