குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
அமெரிக்காவின் முன்னாள் பிரதமர் பரக் ஒபாமா, அந்நாட்டு நீதிமன்றின் ஜுரி சபை உறுப்பினராக கடமையாற்ற உள்ளார். சிக்காககோ மாநில நீதிமன்றமொன்றில் இவ்வாறு ஒபாமா ஜுரி சபை உறுப்பினர்களில் ஒருவராக கடமையாற்ற உள்ளார். ஒபாமாவின் சேவையை பெற்றுக்கொள்வதற்காக சில விசேட ஏற்பாடுகள் செய்ய நேரிட்டுள்ளதாக மாநிலத்தின் பிரதம நீதியரசர் ரிம் எவன்ஸ் தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவரது பாதுகாப்பு தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜுரி சபை உறுப்பினராக கடமையாற்றும் போது ஒபாமாவின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
நாட்டின் பிரஜை என்ற ரீதியில் இந்த சேவையில் ஈடுபடுவதற்கு விரும்புவதாக ஒபாமா தமக்கு அறிவித்துள்ளதாக பிரதம நீதியரசர் தெரிவித்துள்ளார். ஒபாமா ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் சட்டக் கற்கை நெறியை பூர்;தி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.