குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கிய கூட்டத்திற்கு முன்னாள் மஹிந்த ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மஹிந்த ராஜபக்ஸவின் பிரத்தியேக செயலாளர் உதித லொக்குபண்டார இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை, சுதந்திரக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 3ம் திகதி நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து கலந்துரையாடப்பட உள்ளது. இந்தக் கூட்டத்தில் பங்கேற்கத் தவறுவோர் வேறும் ஓர் அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயற்படுவதாகவே கருதப்படுவர் என துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.