208
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னாரில் எண்ணெய் அகழ்வதற்கு சுமார் பதினொரு நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. எண்ணெய் அகழ்வு தொடர்பிலான விலைமனுக் கோரல்களை அண்மையில் அரசாங்கம் கோரியிருந்த நிலையில் இவ்வாறு எண்ணெய் அகழ்வதற்கு பதினொரு நிறுவனங்கள் முனைப்பு காட்டுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கெய்ரன் இந்தியா நிறுவனம் இந்த எண்ணெய் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள முயற்சித்திருந்தது. எனினும், சர்வதேச சந்தையில் எரிபொருளுக்கான விலை வீழ்ச்சியுடன் இந்த நிறுவனம் தனது ஆர்வத்தை கைவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Spread the love