சோமாலியாவின் தலைநகரான மொகடி நகரில் உள்ள பிரபலமான உணவுவிடுதி ஒன்றின் மீது தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் சுமார் 30 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
நேற்று சனிக்கிழமை இரவு அல் ஷபாப் தீவிரவாதிகள் இரண்டு கார் குண்டுகளால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன் துப்பாக்கிப்பிரயோகமும் மேற்கொண்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் அந்த விடுதியில் தங்கி இருப்பதாக தீவிரவாத அமைப்பினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த விடுதியை குறி வைத்து தாக்குதல் நடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடுதியானது அந்நாட்டின் உள்துறை அமைச்சருக்கு சொந்தமானது எனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.