குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-
யாழ்.காங்கேசன்துறை காவற்துறைப் பிரிவில் கடமையாற்றிய சிரேஸ்ட காவற்துறை அத்தியட்சகருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி சன்னங்கள் 45 மாயனவை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளன.
குறித்த அதிகாரி காங்கேசன்துறை காவற்துறை பிரிவில் கடமையாற்றி ஓய்வு பெற்று செல்லும் போது காங்கேசன்துறை காவற்துறை நிலைய பொறுப்பதிகாரியிடம் காவற்துறை திணைக்கள பொருட்களை ஒப்படைத்துள்ளார்.
அதன் போது அவருக்கு வழங்கப்பட்ட கைத்துப்பாக்கி மற்றும் 50 கைத்துப்பாக்கி சன்னங்களில் 05 மாத்திரமே மீள கையளித்துள்ளார். மிகுதி 45 சன்னங்கள் தொடர்பில் எதனையும் கூறவில்லை. அந்நிலையில் குறித்த அதிகாரியினால் ஒப்படைக்கப்படாத 45 துப்பாக்கி சன்னங்கள் தொடர்பிலான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கபப்ட்டு உள்ளது.