குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
டுவன்ரி20 போட்டியில் அதி வேக சதத்தை அடித்த வீரர் என்ற உலக சாதனையை தென் ஆபிரிக்க வீரர் டேவிட் மில்லர் நிலைநாட்டியுள்ளார். நேற்றைய தினம் பங்களாதேஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில், மில்லர் இந்த சாதனையை நிலைநாட்டியுள்ளார். டேவிட் மில்லர் 35 பந்துகளில் சதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.
2012ம் ஆண்டில் நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியொன்றில் சக வீரர் ரிச்சர்ட் லெவி 45 பந்துகளில் சதமடித்திருந்தமையே டுவன்ரி20 போட்டிகளில் அதிவேக சதமாக இதுவரையில் காணப்பட்டது. எனினும் மில்லர் இந்த சாதனையை நேற்றைய தினம் முறிடியத்துள்ளார். 35 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 7 பவுண்டரிகள் அடங்களாக மில்லர் 101 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஒரே ஓவரில் மில்லர் ஐந்து சிக்ஸர்கள் அடங்களாக 31 ஓட்டங்களையும் குவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் பங்களாதேஸ் அணியை வீழ்த்தி தென் ஆபிரிக்க அணி 83 ஓட்டங்களினால் வெற்றியீட்டியுள்ளது.