குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நழுவிச் செல்ல மாட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசியல் சாசனம் தொடர்பிலான பாராளுமன்ற விவாதங்களில் மஹிந்த ராஜபக்ஸ பங்கேற்பார் என குறிப்பிட்டுள்ள அவர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் பாராளுமன்றில் நடைபெறவுள்ள விவாதத்தின் போது கூட்டு எதிர்க்கட்சிக்கு மஹிந்த ராஜபக்ஸ தலைமை தாங்குவார் எனவும் தெரிவித்துள்ளார். புஞ்சிபொரளையில் நேற்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாத அரசியல் சாசனத்தை தோற்கடிக்கும் நோக்கில் கிராமிய மட்டத்தில் கூட்டு எதிர்க்கட்சி மக்களை தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். பிரிவினைவாதத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த அரசியல் சாசனத்தை தோற்கடிக்கும் ஆற்றல் கூட்டு எதிர்க்கட்சிக்கும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் உண்டு எனவும் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.