தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளீதரனை விடுவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிரதியமைச்சராக இருந்த காலத்தில் அவரது பாதுகாப்பிற்காக வழங்கப்பட்ட அரச வாகனத்தை மீள வழங்காமை குறித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட கருணா பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அது தொடர்பான வழக்கு இன்றையதினம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் சந்தேகநபர் தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என சட்டமா அதிபர் அறிவித்துள்ளதாக தெரிவித்து நீதவான் கருணாவை விடுதலை செய்துள்ளார்.