குற்றப் பின்னணி உடையவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
குற்றவழக்கில் தண்டனை பெற்றவர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்க வேண்டும் என பா.ஜ.க.வின் அஸ்வினி உபாத்யாயா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தேர்தல் ஆணையகமும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ள நிலையில் குறித்தவழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
இதன்போது குற்றப் பின்னணி உடைய நபர்கள் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கலாம் என தேர்தல் ஆணையகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வாழ்நாள் தடை விதித்தால் அரசியல் இருந்து குற்றச்செயல்களை குறைக்க முடியும் எனவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.