குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
சர்வதேச கால்பந்தாட்டப் பேரவையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகளுடன் தொடர்புடைய மற்றுமொரு அதிகாரிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கெய்மன் தீவுகள் கால்பந்தாட்டப் பேரவையின் முன்னாள் பொதுச் செயலாளர் கொஸ்டாஸ் டிக்காஸே (Costas Dickasse,) இவ்வாறு தண்டிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க நீதிமன்றமொன்று கொஸ்டாஸிற்கு பதினைந்து மாதங்கள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. நிதிச் சலவை மோசடியுடன் தாம் தொடர்புபட்டிருப்பதாக கொஸ்டாஸ் ஒப்புக்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பல மில்லியன் டொலர்களை மோசடி செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. யாருக்கும் பாதகத்தை ஏற்படுத்துவது தமது நோக்கம் அல்ல எனவும், தாம் கால்பந்தாட்டை மிகவும் நேசிப்பதாகவும் கொஸ்டாஸ் தெரிவித்துள்ளார்.
சைப்ரஸில் பிறந்த கொஸ்டாஸ் ஓர் பிரித்தானிய பிரஜை என்பது குறிப்பிடத்தக்கது. ஊழல் மோசடிகளில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அமெரிக்க அதிகாரிகளின் கோரிக்கைக்கு அமைய கொஸ்டாஸ் முதல் தடவையாக 2015ம் ஆண்டு சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் கைது செய்யப்பட்டிருந்தார்.