Home இலங்கைஇலங்கை ஒர் மிக முக்கியமான பங்காளி – சீனா

இலங்கை ஒர் மிக முக்கியமான பங்காளி – சீனா

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

இலங்கை ஓர் மிக முக்கியமான பங்காளி என சீனாவின் துணைப் பிரதமர் வாங் யங் ( Wang Yang   ) தெரிவித்துள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தற்போது சீனாவிற்கான பயணம் ஒன்றினை மேற்கொண்டுள்ள நிலையில்   மாரப்பன சீன துணைப் பிரதமரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இலங்கையுடனான உறவுகளை மிகவும் அதிகளவில் போற்றுவதாக தெரிவித்துள்ள சீன துணைப் பிரதமர்  அபிவிருத்தி அடைந்துவரும் இலங்கை போன்ற நாடுகளுடன் சிறந்த உறவுகளை பேணுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடாக சீனாவை கருதுவதாக மாரப்பன தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More