குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதனை எதிர்க்கவில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனத்தில் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்படுவதனை எதிர்க்கவில்லை எனினும் ஏனைய மதங்களுக்கு கௌரவம் அளிக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சில தரப்பினர் புதிய அரசியல் சாசனம் தொடர்பில் தேவையற்ற பீதியை கிளப்பி வருவதாகத் தெரிவித்துள்ளார். புதிய அரசியல் சாசனம் தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் போன்ற தொழில்வான்மையுடையவர்கள் அங்கம் வகிக்கும் அமைப்புக்களின் நிலைப்பாடு ஆச்சரியமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.