குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என சற்று முன்னர் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட காரணத்தினால் கீதா பாராளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்க முடியாது என அறிவித்துள்ளது.
கீதா குமாரசிங்க சுவிட்சர்லாந்து மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் குடியுரிமை பெற்றுக்கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. கீதா குமாரசிங்க பாராளுமன்ற உறுப்புரிமை வகிக்க முடியாது என ஏற்கனவே மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தது.
இந்த தீர்ப்பிற்கு எதிராக கீதா குமாரசிங்க, உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, பிரதம நீதியரசர் பிரியசாத் டெப் தலைமையிலான ஐந்து நீதியரசர்களினால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. மனுவை விசாரணை செய்த உச்ச நீதிமன்றமும் கீதா பதவி வகிக்க தகுதியற்றவர் என தீர்ப்பளித்துள்ளது.