குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா அண்மையில் கையொப்பமிட்ட வர்த்தமானி அறிவித்தல் இன்னும் அச்சுக்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்னமும் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என முன்னணி தேர்தல் கண்காணிப்பு அமைப்பான கபே தெரிவித்துள்ளது.
உள்ளுராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் முஸ்தபா நேற்று முற்பகல் 11.30 மணியளவில் கையொப்பமிட்டிருந்தார். எனினும், இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று முற்பகல் 10.30 மணி வரையில் அரச அச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடாத்துவதற்கு இந்த வர்த்தமானி அறிவித்தல் பிரசூரிக்கப்பட வேண்டியது அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.