குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
நியூயோர்க் ட்ரக் தாக்குதலுடன் தொடர்புடையவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் தெரிவித்துள்ளார். இந்த தாக்குதல் மகிழ்ச்சி அளிப்பதாகவும், முடிந்தளவு நபர்களை கொலை செய்யவே முயற்சித்தேன் எனவும் இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரான சய்ஃபுல்லோ சாய்போவ் ( Sayfullo Saipov ) காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
29 வயதான சய்ஃபுல்லோ ட்ரக் வண்டியை மக்கள் மீது மோதச் செய்ததில் 8 பேர் வரையில் கொல்லப்பட்டிருந்தனர். சய்ஃபுல்லோ உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறான குற்றவாளிகளுக்கு உச்சபட்சமாக மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ட்ராம்ப தனது டுவிட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார். இதேவேளை, ஜனாதிபதியின் இந்தக் கருத்து நீதியான விசாரணைகளை பாதிக்குமா என சில மனித உரிமை ஆய்வாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.