குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மனுஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அவுஸ்திரேலியாவிற்கு புகலிடம் கோரி படகு மூலம் சென்ற சுமார் 600 புகலிடக் கோரிக்கையாளர்கள், மனுஸ் தீவுகளில் அமைந்துள்ள முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.இந்த முகாம் மூடப்பட்டு இரண்டு நாட்கள் கடந்துள்ள நிலையிலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேற விரும்பவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
வெளியில் சென்றால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தினால் இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் முகாமை விட்டு வெளியேற விரும்பவில்லை. பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் அவதியுறுகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் இந்த முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் புகலிடக் கோரிக்கையாளர்கள் குடிநீரை பெற்றுக்கொள்ள பாரிய கிணறு ஒன்றை தோண்டி வருகின்றனர். இதேவேளை, அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய 150 பேருக்கு புகலிடம் வழங்கத் தயார் என நியூசிலாந்து மீளவும் தெரிவித்துள்ளது.