மாலபே சைட்டம் தனியார் மருத்துக் கல்லூரி தொடர்பில் அரசாங்கம் வழங்கியுள்ள தீர்வுகள் குறித்து அரச மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்திற்கும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோவுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (03) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.
சைட்டம் பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் தலையீட்டை பாராட்டிய அச்சங்கம்இ மருத்துவ கல்லூரி தொடர்பில் அரசாங்கம் முன்வைத்துள்ள தீர்வுகள் குறித்து சாதகமாக கருத்துக்களை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பிரச்சினையை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் முன்மொழிவுகள் உள்ளடங்கிய செயன்முறையை துரிதமாக நடைமுறைப்படுத்தும்படியும் அச்சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை மருத்துவ பேரவையினால் நிறைவேற்றப்பட்டு சமர்ப்பிக்கப்பட்டுள்ள மருத்துவ கல்வி மற்றும் பயிற்சி தொடர்பிலான குறைந்த நியமங்களை சுகாதார அமைச்சு அடுத்த வழக்கு தவணைக்கு முன்னர் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பித்து முறையான அனுமதியுடன் வர்த்தமானி மூலம் அறிவித்தல் மற்றும் காலந்தாழ்த்தாது சைட்டம் நிறுவனத்தை இரத்துச் செய்து புதிதாக மருத்துவ மாணவர்களை அனுமதிப்பதை நிரந்தரமாக நிறுத்துதல்இ பாராளுமன்ற அனுமதியை பெற்றுக்கொள்ளுதல்இ வர்த்தமானி அறிவித்தலை முறையாக வெளியிடுதல் ஆகிய முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துமாறு அச்சங்கம் கோரிக்கை விடுத்தது.
அரசாங்க மருத்துவ பீட மாணவர்களின் பெற்றோர் சங்கத்தினால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள் தொடர்பில் அவர்களின் கருத்துக்களை முன்வைப்பதற்காக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் டி.சி.திசாநாயக்கவுடன் கலந்துரையாடுவதற்கு ஜனாதிபதியின் செயலாளரினால் சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக்கப்பட்டது.