162
கிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத்தின் தலைவர் தி. இராசநாயகம் சுகவீனம் காரணமாக நேற்று காலமானார். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு யாழ் போதனா வைத்தியசாலையில் காலமானார்.
2009 போருக்குப் பின்னர், கிளிநொச்சி மகாதேவ சிறுவர் இல்லத்தின் தலைவராக பொறுப்பேற்று கடமையாற்றிய தி. இராநாயகம் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்கால வாழ்வுக்காக தன் சேவையினை ஆற்றினார்.
கடந்த 2015ஆம் ஆண்டில் சுகவீனமடைந்த தி. இராசநாயகம் மரணத் தருவாய் வரை சென்று மீண்டிருந்தார். உடல் நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தபோதும் மகா தேவ சிறுவர் இல்ல பிள்ளைகளுக்காக இறுதிக் கணம் வரை சேவையாற்றினார்.
கிளிநொச்சி பூநகரியில் பிறந்த இவர் கிளிநொச்சி மாவட்டத்தின் அரசாங்க அதிபராக செயற்பட்டதுடன், போர்க்கால கட்டத்தில் மக்களின் தேவைகளை தீர்ப்பதில் மிகவும் அக்கறை கொண்டு செயற்பட்டார்.
Spread the love