155
இந்து தீவிரவாதம் இனியும் இல்லை என கூறமுடியாது’ என்று பிரபல நடிகர் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நீதிமன்றில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கமலஹாசனுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பனாரஸில் உள்ள காவல்நிலையத்தில் ஒருவர் முறைப்பாடு அளித்துள்ளார்.அதன் அடிப்படையில் நடிகர் கமல்ஹாசன் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
அத்துடன் இந்து மதத்தை புண்படுத்தும் வகையில் கருத்து கூறிய கமல்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வாரணாசி நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதி அறிவித்துள்ளார்.
இதேவேளை கமல்ஹாசனின் இந்த கருத்து இந்துக்களுக்கு எதிராக இருப்பதாகவும், அவரது இந்த கருத்து இந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளததாகவும் வழக்கு தொடுத்தவர் கூறியுள்ளார்.
இதேவேளை நடிகர் கமலஹாசன் தெரிவித்த கருத்திற்கு இந்தியாவின் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த தமிழக பிரமுகர்கள் மற்றும் சிவசேனா கட்சியினர் தமது கண்டனங்களை வெளியிட்டுள்ளனர்.
Spread the love