காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக் மற்றும் இருவருக்கு அந்நியச் செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அமுலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி தலைவர் யாசின் மாலிக் மற்றும் ஸ்ரீநகரச் சேர்ந்த தம்பதிக்கே இவ்வாறு ஃபெமா சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
ஸ்ரீநகரைச் சேர்ந்த குறித்த தம்பதியிடமிருந்து கடந்த 2001-ம் ஆண்டு 1 லட்சம் அமெரிக்க டொலர் ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் பறிமுதல் செய்திருந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், யாசின் மாலிக் வசம் ஒப்படைப்பதற்காக நேபாளத்தில் ஒருவரிடமிருந்து பணத்தை பெற்றதாக தெரிவித் தனர்.
இந்த வழக்கில் யாசின் மாலிக் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் இவ்வழக்கில் விசாரணையை அதிகாரிகள் முடித்துவிட்டதை தொடர்ந்து மூவரும் 30 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது